குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டார்

குஜராத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை இன்று பார்வையிட்டார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டார்
Published on

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக இன்று குஜராத் சென்றுள்ளார். அவரை மாநில முதல்வர் விஜய் ரூபானி மற்றும் கவர்னர் கோலி ஆகியோர் வரவேற்றனர்.

முதலில் அகமதாபாத் சென்ற குடியரசு தலைவர் அங்குள்ள மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு சென்றார். அங்கிருந்த காந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், சபர்மதி ஆசிரமத்தை சுற்றிலும் பார்வையிட்டார். அவருடன் மாநில முதல்வர் விஜய் ரூபானி உள்பட பலரும் சென்றனர்.

இதைதொடர்ந்து, மேஷானாவில் நடைபெறும் ஜெயின் சமூகத்தினரின் விழாவில் கலந்துகொள்கிறார். அதன்பின், குரு ஆச்சார்யா பத்மாசாகர் சூரீஷ்வர்ஜி மகராஜை சந்திக்கிறார். அதைதொடர்ந்து நாளை ராஜ்கோட்டில் நடைபெறும் நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், நாளை மாலை தனி விமானத்தில் டெல்லி திரும்புகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com