காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து லடாக், ஜம்மு-காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதா ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுடன் இன்று சட்டவடிவத்தை பெற்றது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
Published on

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து லடாக், ஜம்மு-காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதா ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுடன் இன்று சட்டவடிவத்தை பெற்றது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் 370 மற்றும் 35ஏ -சட்டப்பிரிவை ரத்து செய்யும் மசோதா, காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை ரத்து செய்து ஜம்மு மற்றும் காஷ்மீரை ஒருங்கிணைந்த யூனியன் பிரதேசமாகவும் லடாக் பகுதியை இன்னொரு யூனியன் பிரதேசமாகவும் உருவாக்கும் மசோதா உள்பட 4 மசோதாக்களை பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை மந்திரி அமித் ஷா தாக்கல் செய்தார்.

பின்னிரவு வரை இந்த மசோதாக்கள் மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்துக்கு பின்னர் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

மக்களவையிலும் இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. இரவு 7 மணிவரை நீடித்த விவாதங்களுக்கு பின்னர் இந்த 4 மசோதாக்கள் மீதும் தனித்தனியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டன.

இந்த 4 மசோதாக்களும் வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின்னர் இவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com