ராம்ஜெத் மலானி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானியின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி, பிரதமர்
ஜனாதிபதி, பிரதமர்
Published on

புதுடெல்லி:

முன்னாள் மத்திய மந்திரியும், மூத்த வழக்கறிஞருமான ராம்ஜெத் மலானி, உடல்நலக் குறைவால் டெல்லியில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த வெளியிட்டுள்ள அறிக்கையில், புத்தி சாதுர்யம் மிக்க புகழ்பெற்ற ஒரு வழக்கறிஞரை நாடு இழந்துவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டடுள்ள டுவிட்டர் செய்தியில், அவசர நிலை காலத்தில் பொது சுதந்திரத்திற்கான அவரது துணிச்சல், போராட்டம் என்றும் நினைவில் கொள்ளப்படும் என பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com