ஜென்மாஷ்டமி... நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி வாழ்த்து

ஜென்மாஷ்டமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி:

பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினமான ஜென்மாஷ்டமி தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் பிறந்த மதுராவில் உள்ள ஆலயங்களில் ஏராளமான பக்தர்கள் இன்று காலை முதலே சாமி தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் ஜென்மாஷ்டமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘இந்த நாள் நம் அனைவருக்கும் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் நிறைந்த ஒரு மகிழ்ச்சியான நாளாக இருக்கட்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

“அனைவருக்கும் ஜென்மாஷ்டமி வாழ்த்துக்கள். பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அருள், நம் வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை தரட்டும். ஜெய் ஸ்ரீகிருஷ்ணா” என பிரதமர் மோடி டுவிட் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com