கர்நாடகாவின் பாரம்பரிய விளையாட்டான கம்பளாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

கர்நாடகாவின் பாரம்பரிய விளையாட்டான கம்பளாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

தடை விதிக்கப்பட்டிருந்த கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டான கம்பளாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
Published on

தமிழகத்தின் பாராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்று மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய மாபெரும் போராட்டத்தை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த கடந்த ஜனவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலை பெற்ற இந்த தீர்மானம் சட்ட வடிவம் பெற்று, மத்திய அரசின் அறிவிக்கையாகவும் வெளியானது. அதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியும் நடத்தப்பட்டது.

இததேபோல்  கர்நாடகாவில் விவசாயிகளின் பாரம்பரிய விளையாட்டான கம்பளாவுக்கு விதித்துள்ள தடையை நீக்க வலியுறுத்தி, அம்மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தை அடுத்து, தமிழ்நாட்டை போல் கர்நாடக மாநில அரசும் பாரம்பரியமிக்க ‘கம்பளா’ விளையாட்டை மீண்டும் நடத்த வகை செய்யும் அவசர சட்ட மசோதாவை அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றியது.

X

Maalai Malar
www.maalaimalar.com