சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானியின் ராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளார்.
நீதிபதி தஹில் ரமானி
நீதிபதி தஹில் ரமானி
Published on

சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்த வி.கே. தஹில் ரமானி மேகாலயா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். சுப்ரீம் கோர்ட்டின் கொலீஜியத்தின் இந்த பரிந்துரையை மறு பரிசீலனை செய்யக் கோரி அவர் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி வி.கே. தஹில் ரமானி பதவி விலகல் கடிதம் அளித்தார்.

ஆனால் அவரது ராஜினாமா கடிதம் மீது ஜனாதிபதியின் முடிவு குறித்து எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை. அதேசமயம் தலைமை நீதிபதி  தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகளின் விசாரணை நடத்தப்படவில்லை.

கொலீஜியத்தின் பரிந்துரை மற்றும் தனது பதவி விலகல் கடிதத்தின் மீது ஜனாதிபதி முடிவு எடுக்கும் வரை வழக்குகளை விசாரிப்பதில் இருந்தும், ஐகோர்ட்டின் நிர்வாக நடவடிக்கையில் இருந்தும் தலைமை நீதிபதி தஹில் ரமானி விலகி இருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com