

கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட திக் விஜய சிங்கை தோற்கடித்து, பாஜக சார்பில் போட்டியிட்ட பிரக்யா சிங் தாகூர் வெற்றிப் பெற்றார்.
இவர் போபால் தொகுதியின் எம்.பியாக பதவியேற்றது முதலே சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி, பின்னர் அதற்கு மன்னிப்பும் கோரியுள்ளார். சமீபத்தில் காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை தேச பக்தர் என கூறியிருந்தார். இது மாபெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. பாஜக சார்பிலும் கண்டனம் விடுக்கப்பட்டது.
இதனையடுத்து அது தனது தனிப்பட்ட கருத்து என்றும், யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்பதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.