முத்துப்பேட்டையில் இஸ்லாமியர்களின் தொடர் காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக முத்துப்பேட்டையில் இஸ்லாமியர்களின் தொடர் காத்திருப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
போராட்டம்
போராட்டம்
Published on

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் ஒருங்கிணைந்து குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் புதுத்தெரு திடலில் கடந்த பிப்ரவரி 15-ந்தேதி மாலை முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவங்கினர். நேற்று 32-வது நாளாக போராட்டம் நடந்து வந்தது.

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக அரசு பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருவதால் இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் போராட்ட குழுவினரின் அவசரக் கூட்டம் நேற்று புது பள்ளிவாசலில் தலைவர் ஜெர்மன்அலி தலைமையில் நடைபெற்றது. 

இதில் இன்று 18-ந்தேதி முதல் வரும் மார்ச் 31-ந்தேதி வரை கொரோனா நோய் எதிரொலியாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தகவலை போராட்ட குழு செயலாளர் அபூபக்கர் சித்திக் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com