உள்ளாட்சி தேர்தலில் குக்கர் சின்னம் கோரிய தினகரனின் மனு 15-ந்தேதிக்கு தள்ளிவைப்பு

உள்ளாட்சி தேர்தலில் குக்கர் சின்னம் பயன்படுத்த அனுமதி கோரி டெல்லி ஐகோர்ட்டில் தினகரன் தொடர்ந்த வழக்கில் வருகிற 15-ந்தேதிக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.
உள்ளாட்சி தேர்தலில் குக்கர் சின்னம் கோரிய தினகரனின் மனு 15-ந்தேதிக்கு தள்ளிவைப்பு
Published on

புதுடெல்லி:

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் டி.டி.வி.தினகரன் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலிலும் குக்கர் சின்னத்தை பயன்படுத்த அனுமதி அளிக்க தேர்தல் கமி‌ஷனுக்கு உத்தரவிடக்கோரி தினகரன் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

இதற்கு தேர்தல் கமி‌ஷன் பதில் மனு தாக்கல் செய்து இருந்தது. அதில் உள்ளாட்சி தேர்தலில் குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் கமி‌ஷனுக்க அதிகாரம் இல்லை. இது தொடர்பாக மாநில தேர்தல் கமி‌ஷன்தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருந்தது.

இந்த வழக்கில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ் தரப்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை டெல்லி ஐகோர்ட்டு வருகிற 15-ந்தேதிக்கு தள்ளிவைத்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com