ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் பூங்குன்றன் மீண்டும் ஆஜர்

ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் 2-வது முறையாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் இன்று மீண்டும் ஆஜர் ஆனார்.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் பூங்குன்றன் மீண்டும் ஆஜர்
Published on

சென்னை:

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த ஆணையத்தில் போயஸ்கார்டனில் ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்தவர்கள், அரசு துறை அதிகாரிகள், செயலாளர்கள், அப்போதைய தலைமை செயலாளர் ராமமோகன ராவ், இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா, மகன் விவேக், ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக், அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், பாதுகாப்பு அதிகாரிகள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஜெயலலிதாவின் தனிச்செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கம் நேற்று ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது 2 முறை பார்த்ததாகவும், 15 ஆண்டுகளில் சசிகலாவை 1 முறை மட்டுமே பார்த்ததாகவும் கூறி உள்ளார். இந்த பதிலை கேட்டு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கிய உதவியாளர் பூங்குன்றன் ஏற்கனவே ஒருமுறை ஆணையத்தில் ஆஜராகி இருந்த நிலையில் இன்று மீண்டும் விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார்.

இவரிடம் ஜெயலலிதா மரணம் பற்றி போயஸ்கார்டனில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com