ஆதாரங்களின் அடிப்படையில் போயஸ் கார்டனில் சோதனை: பொன்.ராதாகிருஷ்ணன்

போயஸ் கார்டனில் நடைபெற்ற வருமானவரி சோதனை ஆதாரத்தின் அடிப்படையில் நடைபெற்றது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஆதாரங்களின் அடிப்படையில் போயஸ் கார்டனில் சோதனை: பொன்.ராதாகிருஷ்ணன்
Published on

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவிக்க இன்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஓட்டப்பிடாரத்திற்கு வந்தார். அவர் மெயின் பஜாரில் உள்ள வ.உ.சி.சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


போயஸ் கார்டனில் நடைபெற்ற வருமானவரி சோதனை ஆதாரத்தின் அடிப்படையில் நடைபெற்றது. இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கொள்ளையடித்து வைத்துள்ளனர். தமிழகத்தில் நடைபெறும் வருமானவரி சோதனை வரவேற்க கூடியது. சேகர் ரெட்டி வீட்டில் நடந்த சோதனை முடிவு ஆய்வில் உள்ளது. தமிழக கவர்னர் மாவட்டங்களில் ஆய்வு தான் செய்கிறார். அவர் நிர்வாகம் செய்யவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com