

மதுரை:
மதுரையில் இன்று மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-
போக்குவரத்து தொழிலாளர் போராட்டத்தால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விஷயத்தில் அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும்.
போக்குவரத்து துறையின் சீர்கேடுகளை சரிசெய்ய பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும். ஜெயலலிதா ஆட்சியில் முதலிடத்தில் இருந்த போக்குவரத்து துறை தற்போது சீர்குலைந்து உள்ளது.
போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இது சரியல்ல. போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க வேண்டும் என்றால் அரசாங்கத்தை தனியார் மயமாக்க வேண்டியது தானே.
இவ்வாறு அவர் கூறினார். #BusStrike #BJP #PonRadhakrishnan #TamilNews