ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவின் அழிவுக்கு ஆரம்பமாகும் - மணீஷ் திவாரி

நவம்பர், டிசம்பரில் நடைபெறவுள்ள ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜக அழிவை நோக்கி செல்வதன் ஆரம்பமாக அமையும் என மூத்த காங் தலைவர் மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார். #ManishTewari #Congress #FiveStatesPoll #BJP
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவின் அழிவுக்கு ஆரம்பமாகும் - மணீஷ் திவாரி
Published on

சண்டிகர்:

சத்தீஸ்கர், மத்திய பிரதேச்ம், ராஜஸ்தான், மிசோரம், தெலுங்கானா உள்பட ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 12-ம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான தேர்தல் பிரச்சார வேலைகளில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆளும் கட்சியான பாஜக, வரவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னோடியாக இந்த தேர்தல் முடிவுக்ளை எதிர்பார்க்கிறது. பாஜகவிடம் இருந்து இந்த மாநிலங்களை கைப்பற்ற காங்கிரசும் திட்டமிட்டு செய்லாற்றி வருகிறது.

இந்நிலையில், நவம்பர், டிசம்பரில் நடைபெறவுள்ள ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜக அழிவை நோக்கி செல்வதன் ஆரம்பமாக அமையும் என மூத்த காங் தலைவர் மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் கூறுகையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியின் அழிவுக்கு ஆரம்பமாக அமையவுள்ளது.

பாஜகவை எதிர்க்கும் வகையில் அனைத்து முக்கிய கட்சிகளை ஒருங்கிணைக்கும் காங்கிரசின் முயற்சிக்கு விரைவில் நல்ல பலன்கள் கிடைக்கும் என தெரிவித்தார். #ManishTewari #Congress #FiveStatesPoll #BJP

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com