பொள்ளாச்சியில் மீண்டும் பரபரப்பு- சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி

பொள்ளாச்சியில் 16 வயது சிறுமியை அவரது காதலன் உள்பட 6 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலியல் பலாத்கார முயற்சி
பாலியல் பலாத்கார முயற்சி
Published on

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை குறி வைத்து பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் தற்போது பொள்ளாச்சியில் 16 வயது சிறுமியை அவரது காதலன் உள்பட 6 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொள்ளாச்சியை சேர்ந்த 16 வயது சிறுமியின் தாயார் இறந்து விட்டார். சிறுமியின் தந்தை வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார். இதனால் சிறுமி தனது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார்.

சிறுமி ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்த சிறுமிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

நேற்று காலை சிறுமியின் காதலன், அவரை தன்னுடைய வீட்டுக்கு வரும்படி கூறினார். அதன்படி சிறுமி அங்கு சென்றுள்ளார். 2 பேரும் நீண்ட நேரமாக வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென சிறுமியின் காதலனின் நண்பர்கள் 5 பேர் வீட்டுக்குள் நுழைந்தனர். அவர்கள் 6 பேரும் கும்பலாக சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர்.

அந்த கும்பலிடம் இருந்து தப்பிய சிறுமி நடந்த சம்பவத்தை தனது உறவினர்களிடம் கூறினார். அவர்கள் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com