அரும்பாக்கத்தில் விபசார அழகியுடன் கைகோர்த்த போலீஸ்- வாலிபரை தாக்கி பணம் பறிப்பு

அரும்பாக்கத்தில் விபசார அழகியுடன் கைகோர்த்த போலீஸ் ஏட்டு வாலிபரை தாக்கி பணம் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரும்பாக்கத்தில் விபசார அழகியுடன் கைகோர்த்த போலீஸ்- வாலிபரை தாக்கி பணம் பறிப்பு
Published on

சென்னை:

அரும்பாக்கம் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் விபசார தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கும் கோயம்பேடு பஸ்நிலைய போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் ஒருவருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது.

விபசார அழகியின் வீட்டுக்கு போலீஸ் ஏட்டு அடிக்கடி சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். அதே நேரத்தில் வெளியில் இருந்து இளைஞர்கள் பலரும் அப்பெண்ணின் வீட்டுக்கு சென்று வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் வாலிபர் ஒருவர் விபசார அழகியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது அவர்களுக்கு இடையே பணம் கொடுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. விபசார அழகி குறிப்பிட்ட தொகையை கூறியுள்ளார். அந்த வாலிபரோ அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அந்த பெண், போலீஸ் ஏட்டுக்கு தகவல் தெரிவித்தார். அவர் அரும்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு விரைந்து சென்றார். பின்னர் விபசார அழகியுடன் சேர்ந்து போலீஸ் ஏட்டு வாலிபரை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த பணத்தை பறித்துள்ளார்.

பின்னர் அமிஞ்சிகரை போலீஸ் நிலையத்துக்கு வாலிபரை அழைத்துச் சென்று அவர் மீது புகார் கொடுத்துள்ளனர். அதில், பெண்ணிடம் தகராறு செய்து பணம் பறிக்க முயன்றதாக வாலிபர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

ஆனால் அந்த வாலிபரோ, விபசார அழகியின் வீட்டில் நடந்த வி‌ஷயத்தை புட்டு புட்டு வைத்து விட்டார். இதனால் குட்டு வெளிப்பட்டதுடன் போலீஸ் ஏட்டுவும் வசமாக சிக்கிக் கொண்டார். இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டிய போலீஸ்காரரே விபசார அழகியுடன் கைகோர்த்து சமூக விரோத செயலில் ஈடுபட்டிருப்பது போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com