

1947-ம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரில் கதுவா, ஜம்மு, உதம்பூர், ரேசாய், அனந்த்நாக், பாரமுல்லா, பூஞ்ச், மிர்பூர், முசாபர்பாத், லே மற்றும் லடாக், கில்கிட், கில்கிட் வசாரத், சில்ஹாஸ் மற்றும் பழங்குடியினர் பகுதி என மொத்தம் 14 மாவட்டங்கள் இருந்தன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் நீக்கியது. மேலும், மாநில அந்தஸ்தும் பறிக்கப்பட்டு ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.
குப்வாரா, பன்டிப்பூர், கன்டேர்பல், ஸ்ரீநகர், பட்காம், புல்வாமா, சோபியான், குல்காம், ரஜோரி, ரம்பான், டோடா, கிஷ்த்வார், சம்பா, கார்கில் ஆகியவை புதிய மாவட்டங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.