ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக்குவது வரவேற்கத்தக்கது: எச்.ராஜா

சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்குவது வரவேற்கத்தக்கது என பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக்குவது வரவேற்கத்தக்கது: எச்.ராஜா
Published on

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா விழுப்புரம் வந்தார். அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா வசித்து வந்தார். அவரது இல்லம் நினைவு இல்லமாக ஆக்கும் பணி தொடங்கியுள்ளதே?

பதில்:- இந்த விசயம் வரவேற்கத்தக்கது.

கே:- ஆர்.கே. நகர் தொகுதியில் பாரதிய ஜனதா தோல்வி அடைந்துள்ளதே அது பற்றி உங்கள் கருத்து என்ன?

ப:- தி.மு.க.வோடு திருமாவளவன் சேர்ந்ததால் அவர்களும் தோல்வி அடைந்துள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பலம் வென்றுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

புத்தாண்டையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களை நள்ளிரவில் திறந்து வழிபடலாம். அது அவர்களது கருத்து. அவர்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், இந்து கோவில்களின் ஆகமவிதிப்படி நள்ளிரவு 12 மணிக்கு மேல் நடைதிறக்கக்கூடாது. இதற்கு அரசும் அனுமதிக்கக் கூடாது.

சுபாஷ்சந்திபோசுக்கு விழுப்புரத்தில் அடுத்த ஆண்டு 30-ந் தேதிக்குள் சிலை வைக்க அனுமதி வழங்கும்படி கலெக்டரை சந்தித்து பேச உள்ளேன்.

X

Maalai Malar
www.maalaimalar.com