ருவாண்டா, உகாண்டா, தென் ஆப்பிரிக்காவுக்கு பிரதமர் மோடி 4 நாள் பயணம் - பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பு

அரசுமுறை பயணமாக ருவாண்டா, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடுத்த வாரம் செல்லும் பிரதமர் மோடி, பிரிக்ஸ் மாநாட்டிலும் பங்கேற்க உள்ளார் என வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #Modi #BRICSSummit
ருவாண்டா, உகாண்டா, தென் ஆப்பிரிக்காவுக்கு பிரதமர் மோடி 4 நாள் பயணம் - பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பு
Published on

புதுடெல்லி:

பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக ருவாண்டா, உகாண்டா மற்றும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு நான்கு நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். ஜூலை 23ம் தேதி இந்தியாவில் இருந்து புறப்படும் அவர் ஜூலை 27ம் தேதி அங்கிருந்து இந்தியா திரும்புகிறார்.

இந்த சுற்றுப்பயணத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார் என வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டா நாட்டுக்கு வரும் 24-ம் தேதி செல்கிறார். அங்கு எண்ட்டேபி நகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மோடிக்கு உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி விருந்து அளிக்கிறார். அதைத் தொடர்ந்து, வரும் 25-ம் தேதி உகாண்டா பாராளுமன்றத்தில் சிறப்புரையாற்ற உள்ளார். #Modi #BRICSSummit

X

Maalai Malar
www.maalaimalar.com