பிரதமர் மோடி 30ம் தேதி சென்னை வருகை - பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு

சென்னை ஐஐடி தொழில்நுட்ப பயிலகத்தின் 56-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் திங்கட்கிழமை சென்னை வருகிறார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

சென்னை:

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி தொழில்நுட்ப பயிலகத்தின் 56-வது பட்டமளிப்பு விழா வரும் 30-ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு ஐஐடி சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டது. இதையேற்றுக் கொண்ட பிரதமர் மோடி வரும் திங்கட்கிழமை சென்னை வருகிறார்.

பட்டமளிப்பு விழாவில் சிறப்புரையாற்றும் மோடி, அன்றைய தினம் ஐஐடி வளாகத்தில் நடைபெறும் சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்க உள்ளார்.

பிரதமரின வருகையையொட்டி மீனம்பாக்கம் விமான நிலையம் மற்றும் கிண்டி ஐஐடி வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com