பொருளாதார அமைப்பை முறைப்படுத்த ஜி.எஸ்.டி. மிக முக்கியமான மைல்கல்: பிரதமர் மோடி

பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. வரி அறிமுக நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதார அமைப்பை முறைப்படுத்த ஜி.எஸ்.டி. மிக முக்கியமான மைல்கல் என தெரிவித்தார்.
பொருளாதார அமைப்பை முறைப்படுத்த ஜி.எஸ்.டி. மிக முக்கியமான மைல்கல்: பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி:

ஜி.எஸ்.டி. அறிமுக கூட்டம் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. குடியரசு தலைவர், பிரதமர், மத்திய மந்திரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஜி.எஸ்.டி. அறிமுக கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது.

நாட்டை முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்லும் நோக்கில் ஜி.எஸ்.டி இருக்கும். நாட்டின் எதிர்காலப் பாதையை நள்ளிரவில் முடிவு செய்ய இருக்கின்றோம். ஜி.எஸ்.டி ஒரு அரசின் சாதனை அல்ல, கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. சுதந்திர நள்ளிரவைப் போன்று இந்த நள்ளிரவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நீண்ட ஆலோசனைக்கு பின்னரே ஜி.எஸ்.டி.க்கு இறுதி வடிவம் தரப்பட்டது.

ஜி.எஸ்.டி.யால் வியாபாரத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் நீங்கும், இந்தியாவில் முதலீடு செய்பவர்களுக்கும் இது உதவிகரமாக இருக்கும். இந்திய ரயில்வேயை போல் மத்திய மாநில அரசுகள் இணைந்து கையாளும். நாட்டின் வளர்ச்சிக்கு ஜி.எஸ்.டி உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com