சீன அதிபருக்கு நினைவுப் பரிசு வழங்கினார் பிரதமர் மோடி

மாமல்லபுரம் வந்துள்ள சீன பிரதமர் ஜி ஜின்பிங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி நினைவுப் பரிசு வழங்கினார்.
தஞ்சாவூர் ஓவியம்
தஞ்சாவூர் ஓவியம்
Published on

சென்னை:

மாமல்லபுரம் வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதம்ர் நரேந்திர மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையுடன் வரவேற்றார்.

சீன அதிபருக்கு மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களின் தொன்மையையும், பெருமையையும் விளக்கி கூறினார் மோடி, தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை இருவரும் கண்டு களித்தனர்.

அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு கைவினைப் பொருள்கள் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட நாச்சியார் கோவில் விளக்கு மற்றும் தஞ்சாவூர் ஓவியம் ஆகியவற்றை சீன அதிபருக்கு பிரதமர் மோடி நினைவுப் பரிசாக வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com