

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை இன்று மாற்றியமைக்கப்பட்டது. மத்திய வர்த்தக துறையில் இணை மந்திரியாக பணியாற்றிய நிர்மலா சீதாராமன் கேபினட் மந்திரியாக பதவியேற்றுள்ளார். அதுவும் பாதுகாப்புத்துறை மந்திரியாக நிர்மலா சீதாராமன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம், பாதுகாப்புத் துறையின் முழுநேர முதல் பெண் மந்திரி என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். முன்னதாக இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது பாதுகாப்பு துறையை கூடுதலாக சில காலம் கவனித்தது குறிப்பிடத்தக்கது.