நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து

சகோதரத்துவம் நமது சமூகத்தில் பெருகட்டும் என பிரதமர் நரேந்திர மோடி ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து உள்ளார்
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து
Published on

புதுடெல்லி:

முஸ்லிம்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். ரம்ஜானையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் எனது சக குடிமக்களுக்கு குறிப்பாக முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு ரம்ஜான் வாழ்த்துகள். இந்த சிறப்பான தருணம் நமது ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளத்தை கொண்டுவருவது மட்டுமின்றி, மனுக்குலத்துக்கு சேவை செய்ய நம்மை மறுகட்டமைப்பதாகவும் அமையட்டும்’ என்று கூறியுள்ளார்.

இதைப்போல பிரதமர் நரேந்திர மோடியும் ரம்ஜான் வாழ்த்து வெளியிட்டு உள்ளார். அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துகள். இந்த மங்களகரமான நாளில் அமைதியும், சகோதரத்துவமும் நமது சமூகத்தில் பெருகட்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com