ஆப்கானிஸ்தான் அதிபராக மீண்டும் பொறுப்பேற்ற அஷ்ரப் கனிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஆப்கானிஸ்தான் அதிபராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள அஷ்ரப் கனிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி:

ஆப்கானிஸ்தான் அதிபர் பதவிக்கு கடந்த செப்டம்பர் 28-ம் தேதி நடைபெற்ற தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது.

இதில் அதிபர் அஷ்ரப் கானி 9 லட்சத்து 23 ஆயிரத்து 868 (50.64 சதவீதம்) வாக்குகளை வாங்கி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அதிபராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள அஷ்ரப் கனிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய பிரதமரும், எனது நண்பருமான நரேந்திர மோடி என்னுடன் தொலைபேசியில் பேசினார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்தார். அப்போது விரைவில் இந்தியா வருமாறும் அழைப்பு விடுத்தார் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com