

மறைந்த மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானின் உடல் இன்று டெல்லியில் இருந்து அவரது சொந்த மாநிலமான பீகாருக்கு கொண்டு செல்லப்படுகிறது.
லோக் ஜன சக்தி தலைவரும் மத்திய மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வான் டெல்லியில் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராம்விலாஸ் பஸ்வானின் உடல், மருத்துவ நடைமுறைகளுக்கு பிறகு இன்று காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து பஸ்வானின் உடல் மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
பஸ்வான் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் இன்று பாராளுமன்ற கட்டிடம் மற்றும் ஜனாதிபதி மாளிகையில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.