அருண் ஜெட்லி முகத்தை கடைசியாக பார்க்க தவறிவிட்டேன் - இரங்கல் கூட்டத்தில் பிரதமர் மோடி உருக்கம்

மறைந்த முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லியின் ஆன்மா சாந்தியடைய டெல்லியில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, கடைசி முறையாக அருண் ஜெட்லி முகத்தை பார்க்க தவறிவிட்டேன் என குறிப்பிட்டார்.
பாடல்கள் பாடும் குழுவினர்
பாடல்கள் பாடும் குழுவினர்
Published on

புதுடெல்லி:

முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி கடந்த மாதம் 24ம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தும் நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தினர்.

இதற்கிடையே, முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு பீகார் மாநிலத்தில் உருவச்சிலை அமைக்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கடைசி முறையாக அருண் ஜெட்லி முகத்தை பார்க்க தவறிவிட்டேன் என குறிப்பிட்டார்.

முன்னதாக, பிரார்த்தனை நிகழ்ச்சியில் பஜனைப்பாடல்கள் பாடப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com