தேசிய பத்திரிகை தினம்: செய்தியாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

தேசிய பத்திரிகை தினத்தையொட்டி செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேசிய பத்திரிகை தினம்: செய்தியாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Published on

புதுடெல்லி:

இந்தியாவில் அச்சு ஊடகங்களை நெறிப்படுத்தும் அமைப்பான பிரஸ் கவுன்சில் இந்தியா கடந்த 1966ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி தொடங்கப்பட்டது. அன்று முதல் நவம்பர் 16-ம் தேதி தேசிய பத்திரிகை தினமாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இன்று தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர்களின் கடின உழைப்பையும் வெகுவாகப் பாராட்டி உள்ளார்.

‘சுதந்திரமான ஊடகம் துடிப்பான ஜனநாயகத்தின் மூலைக்கல்லாக விளங்குகிறது. அனைத்து வடிவங்களிலும் பத்திரிகை சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தை நிலைநாட்ட நாங்கள் முழுமையாக கடமைப்பட்டுள்ளோம். 125 கோடி இந்தியர்களின் திறமைகள், வலிமைகள் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றை மேலும் வெளிப்படுத்தும் வகையில் ஊடகங்களை பயன்படுத்த வேண்டும்’ என்று மோடி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com