தூய்மை, ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் முஸ்லிம்களின் பங்களிப்புக்கு பிரதமர் மோடி புகழாரம்

குஜராத் மாநிலத்தை வெள்ளம் சூழ்ந்த வேளையில் அங்குள்ள கோயில்களை தூய்மைப்படுத்தவும் நாட்டில் ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதிலும் இஸ்லாமிய அமைப்புகள் ஆற்றிய பங்களிப்புக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
தூய்மை, ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் முஸ்லிம்களின் பங்களிப்புக்கு பிரதமர் மோடி புகழாரம்
Published on

குஜராத் மாநிலத்தை வெள்ளம் சூழ்ந்த வேளையில் அங்குள்ள கோயில்களை தூய்மைப்படுத்தவும் நாட்டில் ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதிலும் இஸ்லாமிய அமைப்புகள் ஆற்றிய பங்களிப்புக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, வானொலி மூலம் மான் கி பாத் நிகழ்ச்சியில் இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:-

குஜராத் மாநிலம் சமீபத்தில் மிக மோசமான வெள்ளபாதிப்புக்குள்ளானது. வெள்ளம் வடிந்த பின்னர் அனைத்து இடங்களிலும் குப்பையும், அசுத்தமும் சூழ்ந்திருந்தது.

அப்போது, பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தனேரா பகுதியில் உள்ள இரு மசூதிகளை தூய்மைப்படுத்திய ஜாமியத்-உலேமா-இ-ஹிந்த் அமைப்பினர் அருகாமையிலுள்ள 22 கோயில்களையும் தூய்மைப்படுத்தி தந்தனர். தாங்களாகவே முன்வந்து இந்த சிரமத்தை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

இதன் மூலம் ஒருமைப்பாட்டுக்கும் தூய்மைக்கும் ஜாமியத்-உலேமா-இ-ஹிந்த் அமைப்பை சேர்ந்த தொண்டர்கள் மிகச் சிறந்த முன்னுதாரணமாக இருந்துள்ளனர், இதுபோன்ற அர்ப்பணிப்பும் பெருமுயற்சியும் நமக்குள் இருந்தால், நிச்சயமாக நமதுநாடு மிகவும் உயர்ந்த நிலைக்கு சென்றுவிடும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com