பிரிட்டன் பிரதமரை கொல்ல முயற்சியா?: முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு முறியடித்த போலீஸ்

பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவை கொல்ல சதி திட்டம் வகுத்ததாக இருவரை லண்டன் நகர போலீசார் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.
Published on

லண்டன்:

பிரிட்டன் பிரதமராக பதவி வகித்து வரும் தெரேசா மே, லண்டன் நகரில் உள்ள 10 டவுனிங் ஸ்ட்ரீட் இல்லத்தில் வசித்து வருகிறார். கடந்த மாதம் 28-ம் தேதி தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஸகாரியா ரெஹ்மான், அகியூப் இம்ரான் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், அவர்கள் இருவரும் பிரதமர் தெரேசா மேவை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக போலீசார் நேற்று தெரிவித்துள்ளனர். லண்டன் வெஸ்ட்மெய்ஸ்டர் கோர்ட்டில் அவர்களை ஆஜர்படுத்திய பின்னர் போலீசார் இதனை தெரிவித்தனர். சக்தி வாய்ந்த குண்டுகள் தயாரித்து பிரதமரின் வீட்டை தாக்கி, அவரை கொல்ல சதி செய்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரதமரின் செய்தி தொடர்பாளர், கடந்த 12 மாதங்களில் 9 தீவிரவாத தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com