கார் தீ வைத்து எரிப்பு: திராவிட இயக்கத்தினருக்கு தொடர்பு- நந்தகுமார் குற்றச்சாட்டு

கோவையில் கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் திராவிட இயக்கத்தினருக்கு தொடர்பு இருக்கலாம் என நந்தகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
கார் தீ வைத்து எரிப்பு: திராவிட இயக்கத்தினருக்கு தொடர்பு- நந்தகுமார் குற்றச்சாட்டு
Published on

கோவை:

கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டது குறித்து பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் சி.ஆர். நந்த குமார் கூறியதாவது-

நேற்று இரவு வீட்டில் நானும் எனது தாய் கவுசல்யா மட்டுமே இருந்தோம். எனது மனைவி வெளியூர் சென்று விட்டார்.

அதிகாலை 3 மணியளவில் சத்தம் கேட்டு எனது தாய் என்னை எழுப்பினார். நான் வெளியே வந்து பார்த்த போது கார் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. என்னை பார்த்ததும் ஹெல்மெட் அணிந்த படி வந்த 3 வாலிபர்கள் தப்பி ஓடினார்கள்.

கார் மீது பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றேன். தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தேன். தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் கார் எரிந்து சேதம் அடைந்தது.

திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள் தான் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பாரதிய ஜனதா மாவட்ட அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் தான் எனது கார் தீவைத்து எரிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக போலீசில் புகார் தெரிவித்து உள்ளேன். எனது வீட்டின் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி இருந்த காட்சியை போலீசாரிடம் காண்பித்து உள்ளேன். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com