பேரூர் அருகே கார் மோதி தொழிலாளி பலி

பேரூர் அருகே கார் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து
விபத்து
Published on

கோவை:

கோவை பேரூர் பச்சாபாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் இவரது மகன் கோபால் (வயது 22). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. நேற்று இவர் தனது மொபட்டில் கோவை- சிறுவாணி ரோட்டில் செல்லப்ப கவுண்டன் புதூர் அருகே சென்றார். அப்போது எதிரே வந்த கார் மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கோபால் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com