பெரியபாளையம் அருகே குடோனில் பதுக்கிய ரூ. 10 லட்சம் குட்கா பறிமுதல்- 5 பேர் கைது

பெரியபாளையம் அருகே குடோனில் பதுக்கிய ரூ. 10 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மூட்டைகள்.
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மூட்டைகள்.
Published on

பெரியபாளையம்:

தமிழகத்தில் குட்கா, புகையிலை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனினும் கடைகளில் குட்கா, புகையிலை தாராளமாக விற்கப்படுகிறது.

இந்த நிலையில் பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி கட்டு தெருவில் உள்ள ஒரு குடோனின் இருந்து மினி லாரியில் குட்கா ஏற்றுவதாக ஆரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே, அவரது தலைமையில் போலீஸ் ஏட்டு தியாகு, பரந்தாமன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மினி லாரியை சுற்றி வளைத்தனர். இதில் இருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக ஆரணியை சேர்ந்த நித்யானந்தம், நாகராஜ், தூண்டி கிருஷ்ணா, சரண்குமாரை, ராஜ்குமார் ஆகிய 5 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.அய்யப்பன் என்பவர் தப்பி ஓடி விட்டார்.

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா, மினி லாரியுடன் கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீசார் ஆரணி காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் உத்தரவின் பேரில் ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து குட்கா எங்கிருந்து குடோனுக்கு வருகின்றது. இதில், யார்- யாருக்கு தொடர்பு என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com