சிறுநீரக தொற்று- மூட்டுவலி பிரச்சனை: பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனை

சிறுநீரக தொற்று மற்றும் மூட்டுவலியால் அவதிப்படும் பேரறிவாளனுக்கு இன்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பேரறிவாளனை மருத்துவ பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்து வந்த காட்சி.
பேரறிவாளனை மருத்துவ பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்து வந்த காட்சி.
Published on

வேலூர்:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி பேரறிவாளன், வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவர், கடந்த சில மாதங்களாக சிறுநீரக தொற்று நோய் மற்றும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறார்.

இதற்காக, பேரறிவாளன் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர் சிகிச்சைக்கு பிறகு, பேரறிவாளன் உடல் நிலை தேறி வருகிறது. அவருக்கு தேவைப்படும் சிகிச்சை மற்றும் எடுத்துக் கொள்ளும் உணவுகளை சிறைத்துறை நிர்வாகம் முறையாக கண்காணித்து வருகிறது.

இந்த நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக பேரறிவாளன், வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

வேலூர் ஆண்கள் ஜெயிலில் இருந்து டி.எஸ்.பி. ஆரோக்யம் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

ஆஸ்பத்திரியில் பேரறிவாளனுக்கு முழு உடல் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. காலை 10.50 மணிக்கு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு, சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

இதையடுத்து மதியம் 12 மணியளவில் போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் ஜெயிலுக்கு அழைத்து வரப்பட்டு அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com