பெரணமல்லூர் அருகே பைக் மீது கார் மோதி வாலிபர் பலி

பெரணமல்லூர் அருகே பைக் மீது கார் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரணமல்லூர் அருகே பைக் மீது கார் மோதி வாலிபர் பலி
Published on

சேத்துப்பட்டு:

பெரணமல்லூர் தேசூர் அடுத்த திருமால்பாடி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் பழனி (வயது 28). இவர் ஆரணிக்கு சென்று மோட்டார் சைக்கிளில் திருமணி கிராமத்திற்கு வரும் போது எதிரே ஆரணியை நோக்கி அதிவேகமாக வந்த கார் இவர் மீது மோதியது.

இதில் பழனி தூக்கிவீசி சாலை ஓரேத்தில் விழுந்தார். அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். தகவல் அறிந்த பெரணமல்லூர் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பழனி உடலை ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து பெரணமல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கார் ஓட்டி வந்த டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com