பெரம்பலூர் அருகே கார்-லாரி மோதல்: 2 பேர் பலி

பெரம்பலூர் அருகே கார்-லாரி மோதல்: 2 பேர் பலி

பெரம்பலூர் அருகே இன்று கார்-லாரி மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
Published on

வேப்பந்தட்டை:

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள தென்முகத்துவிளை பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (வயது 51). திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (39).

இவர்கள் மற்றும் அருமனை பகுதியை சேர்ந்த அருண் (28), அர்ஜூன் (34) ஆகியோர் சென்னையில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்றிரவு ஒரு காரில் அருமனையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டனர். காரை கிறிஸ்டோபர் ஓட்டினார்.

இன்று காலை பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே சின்னாறு திருச்சி- சென்னை நான்கு வழிச்சாலையில் கார் சென்று கொண் டிருந்தது. அப்போது திடீரென நிலைதடுமாறிய கார் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் ஏறி, இடதுபுறத்தில் பாய்ந்தது.

அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து திருச்சிக்கு சரக்கு ஏற்றிக் கொண்டு சென்ற மினி லாரி மீது பயங்கர வேகத்தில் மோதியது.

இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. காரின் முன்பகுதியில் இருந்த கிறிஸ்டோபர், ரவிக்குமார் ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். அருண், அர்ஜூன் ஆகியோர் காயமடைந்து உயிருக்கு போராடினர். மேலும் லாரி டிரைவர் சென்னை மதுராந்தகத்தை சேர்ந்த சண்முகம் (28), கிளீனர் திலீப் (27) ஆகியோரும் காயமடைந்தனர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் மங்களமேடு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்து காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி கிடந்த 2 பேரையும், லாரி டிரைவர், கிளீனரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அருண், அர் ஜூன் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

மேலும் பலியான 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காரை ஓட்டிய கிறிஸ்டோபர் தூங்கியதன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com