2-ஜி, நிலக்கரி ஊழல்களில் பழகிப் போனவர்கள் ஜி.எஸ்.டி.யை எதிர்க்கின்றனர் - அருண் ஜெட்லி

ஜி.எஸ்.டி. வரியை கொள்ளைக்காரன் ‘கப்பர் சிங்’ வரி என்று குறிப்பிட்ட ராகுல் காந்திக்கு பதிலளித்த அருண் ஜெட்லி, 2-ஜி, நிலக்கரி ஊழல்களில் பழகிப் போனவர்கள் ஜி.எஸ்.டி.யை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.
2-ஜி, நிலக்கரி ஊழல்களில் பழகிப் போனவர்கள் ஜி.எஸ்.டி.யை எதிர்க்கின்றனர் - அருண் ஜெட்லி
Published on

புதுடெல்லி:

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். சமீபத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருந்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி புதிய சரக்கு மற்றும் சேவை வரியை கொள்ளைக்காரன் ‘கப்பர் சிங்’ வரி என்று குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக நிருபரின் கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.

2-ஜி அலைக்கற்றை ஊழல் மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல்களில் பழகிப் போனவர்கள் சட்டரீதியான ஜி.எஸ்.டி. வரியை எதிர்க்கத்தான் செய்வார்கள் என்று அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com