பட்டாபிராம் அருகே சொத்து தகராறில் மோதல் - 3 பேர் கைது

பட்டாபிராம் அருகே சொத்து தகராறில் ஏற்பட்ட மோதல் தெடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

ஆவடி:

ஆவடியை அடுத்த பட்டாபிராம் தண்டுரை பள்ளிக் கூட தெருவை சேர்ந்தவர் ரேகா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நித்தியாவுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது.

இது தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இது குறித்து ரேகா, நித்யா அளித்த புகாரின் பேரில் பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கமலதாசன், மகேஷ், சுரேஷ் குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com