தாந்தோணி கிராமத்தில் கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்: எம்.ஆர். விஜயபாஸ்கர் பங்கேற்பு

தாந்தோணி கிராமத்தில் கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.
தாந்தோணி கிராமத்தில் கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்: எம்.ஆர். விஜயபாஸ்கர் பங்கேற்பு
Published on

கரூர்:

கரூர் நகராட்சி தாந்தோணி வெள்ளக்கவுண்டர்நகரில் கற்பக விநாயகர் கோவில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது. இதில் பால முருகன், தட்ஷினாமூர்த்தி, மகாவிஷ்ணு, லிங்கோத்பவ மூர்த்தி, துர்க்கையம்மன், நவகிரகம் ஆகிய மூர்த்திகள் சன்னதிகள் உள்ளன.

இந்த கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விசேஷ சந்தி, பூதசுத்தி ஆகிய பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் பூஜையில் குடத்தில் வைக்கப்பட்டது.

பின்னர்  பூனித நீர் மேள தாளத்துடன் விக்னேஷ் சிவாச்சாரியார் தலைமையில் கொண்டு செல்லப்பட்டு கோபுரத்துக்கு ஊற்றி கும்பாபிஷேகம் செய்யபட்டது .

தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. அதன்பின் பக்தர்கள் மீது புனீத நீர் தெளிக்கப்பட்டது.

விழாவில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,  கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி தலைவர் வக்கீல் வி.சி.கே. பாலகிருஷ்ணா, இளைஞர் அணி செயலாளர் வி.சி.கே. ஜெயராஜ், ஊர் கொத்துக்காரர் சி.பழனிச்சாமி, அருண் பஸ் உரிமையாளர் ஏ.சிதம்பரம், ஊர் பிரமுகர்கள் ஈஸ்வரமூர்த்தி, டி.கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். கும்பா பிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com