தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: கீதாஜீவன் எம்எல்ஏ பங்கேற்பு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் செயற்குழு கூட்டம் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கீதாஜீவன் எம்எல்ஏ பங்கேற்றார்.
கீதாஜீவன் எம்எல்ஏ
கீதாஜீவன் எம்எல்ஏ
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் செயற்குழு கூட்டம் தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

தலைமை கழக பிரதிநிதி பாலவாக்கம் சோமு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் 15-வது அமைப்பு தேர்தல் குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாவட்ட பொருளாளர் மோகன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராஜமன்னார், ஜெயக்குமார் ரூபன், ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com