மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயண அட்டை மூலம் வாகன கட்டணம் செலுத்தலாம்

சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள நிறுத்துமிடங்களில் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணத்தை மெட்ரோ ரெயில் பயண அட்டை மூலம் மட்டுமே செலுத்தும் முறை வருகிற 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
மெட்ரோ ரெயில் பயண அட்டை
மெட்ரோ ரெயில் பயண அட்டை
Published on

சென்னை:

சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளின் தடையற்ற போக்குவரத்தை எளிதாக்குவதற்காக பயண அட்டை மூலம் வாகனம் நிறுத்தும் கட்டணங்களை செலுத்தும் ஏற்பாட்டை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் செய்திருந்தது.

இது தற்போது சோதனை அடிப்படையில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய முறை அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் வருகிற 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

இந்த முறை கடந்த 1-ந்தேதி முதலே அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்து. ஆனால் இந்த புதிய முறைக்கு மாறுவதற்கு பயணிகள் கால அவகாசம் கேட்டனர். அதையேற்று 1 மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது 26 நாள் கடந்து விட்ட நிலையில் இன்னும் 5 நாளில் புதிய முறை அமலாகிறது.

இந்த புதிய முறைப்படி சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள நிறுத்துமிடங்களில் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணத்தை மெட்ரோ ரெயில் பயண அட்டை மூலம் மட்டுமே செலுத்த முடியும்.

மெட்ரோ ரெயில் பயண அட்டை இல்லாத பயணிகள், பொது மக்கள் மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாகனத்தை நிறுத்த அங்குள்ள வாடிக்கையாளர் சேவை மையம் மூலமாகவோ அல்லது டிக்கெட் கவுண்டர்கள் மூலமாகவோ, மெட்ரோ ரெயில் பயண அட்டையை வாங்க வேண்டும்.

இதன் மூலம் மட்டுமே பார்க்கிங் கட்டணத்தை செலுத்த முடியும்.

X

Maalai Malar
www.maalaimalar.com