சித்தராமையாவுக்காக காங்கிரஸ் கட்சி இல்லை- பரமேஸ்வரா

சித்தராமையாவுக்காக காங்கிரஸ் கட்சி இல்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான பரமேஸ்வரா கூறினார்.
மந்திரி பரமேஸ்வரா
மந்திரி பரமேஸ்வரா
Published on

பெங்களூரு :

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான பரமேஸ்வரா துமகூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எனக்காகவோ அல்லது சித்தராமையாவுக்காகவோ காங்கிரஸ் கட்சி இல்லை. காங்கிரஸ் கட்சிக்காக நாங்கள் இருக்கிறோம். காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டம் காலை 11.30 மணிக்கு நடைபெறுவதாக கூறப்பட்டது. நான் சிக்கமகளூருவில் இருந்தேன். ஆனால் திடீரென நேரத்தை மாற்றி, முன்கூட்டியே காலை 9.30 மணிக்கு நடத்தினர். அதனால் அந்த கூட்டத்தில் என்னால் பங்கேற்க முடியவில்லை.

கூட்டத்தில் சிலரின் தனிப்பட்ட விஷயத்திற்காக கருத்து மோதல் ஏற்பட்டிருக்கலாம். நானும் கர்நாடக காங்கிரஸ் தலைவராக 8 ஆண்டுகள் பணியாற்றினேன். நூற்றுக்கணக்கான ஆலோசனை கூட்டங்களை நடத்தினேன். எங்கள் கட்சியில் அடிப்படை காங்கிரசார், வேறு கட்சிகளில் இருந்து வந்த காங்கிரசார் என்ற பேதம் இல்லை. கட்சியில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படுகிறது.

சித்தராமையா இப்போதும் எங்கள் தலைவர் தான். கே.எச்.முனியப்பாவின் தோல்விக்கு காரணம் என்ன என்று எனக்கு தெரியாது. கட்சி மேலிடத்துக்கு புகார் அளித்தால் அதுபற்றி மாநில தலைவர் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறு பரமேஸ்வரா கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com