பரமத்திவேலூர் அருகே இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற கூலி தொழிலாளி கைது

பரமத்திவேலூர் அருகே இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர் அருகே இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற கூலி தொழிலாளி கைது
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிளிக்கல்பாளையம் அருகே கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி(வயது 40) கூலி தொழிலாளி.

இவர் நேற்று மாலை 6 மணிக்கு பிளிக்கல் பாளையம் பரிசல் துறை பகுதியில் காவிரி ஆற்றின் கரையோரமாக நின்று கொண்டிருந்தார்.

அப்போது ஈரோடு மாவட்டம் கொடிமுடி பகுதியில் கூலி வேலைக்கு சென்ற விட்டு திரும்பிய 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வீட்டிற்கு செல்வதற்காக காவிரி ஆற்றில் இல்லாததால் அந்த ஆற்றின் வழியாக நடந்து சென்றார். இவர் தனியாக நடந்து வருவதை நோட்டமிட்ட பழனிசாமி சுற்றிலும் யாரும் இல்லாததால் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வழிமறித்து அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து கற்பழிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பழனிசாமியின் பிடியில் இருந்து தப்பித்து ஓடி வந்து தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்குப்பதிவு செய்து கூலி தொழிலாளி பழனிசாமியை கைது செய்து சிறையில் அடைத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com