பரமத்திவேலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி சமையல் மாஸ்டர் பலி

பரமத்திவேலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சமையல் மாஸ்டர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி சமையல் மாஸ்டர் பலி
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள தனியார் ஓட்டலில் கேரளாவை சேர்ந்தவர் மணி (54) மாஸ்டாராக வேலை பார்த்து வந்தார்.

இவர் நேற்று இரவு 10 மணியளவில் வேலை முடித்து விட்டு தனது அறைக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பேட்டபாளையம் வழியாக சென்ற போது பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மணி பலத்த காயம் அடைந்தார்.

உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மணியை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும்வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து மோகனூர் போலீசார் தகவலறிந்து நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் வண்டியை ஓட்டிவந்து விபத்து ஏற்படுத்திய வாலிபருக்கும் காயம் ஏற்பட்டு உள்ளதால் அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com