பாபநாசம் அருகே பெண் உள்பட 3 பேருக்கு கத்திக்குத்து - 3 பேர் கைது

பாபநாசம் அருகே பெண் உள்பட 3 பேருக்கு கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாபநாசம் அருகே பெண் உள்பட 3 பேருக்கு கத்திக்குத்து - 3 பேர் கைது
Published on

பாபநாசம்:

பாபநாசம் அருகே திருவையாத்துக்குடி கிராமம் காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் பழனி மகன் கனகராஜ். இவரது குடும்பத்துக்கும் அதே ஊரை சேர்ந்த ரவி குடும்பத்திற்கும் இடப் பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று ரவி மகன்கள் ராஜேஷ், செல்வகுமார், பால கிருஷ்ணன், உறவினர்கள் சூர்யா, குமரேசன், தினேஷ் ஆகிய 6 பேரும் சேர்ந்து கனகராஜையும், அவரது அண்ணன் பாலமுருகன், அண்ணி சத்யா ஆகியோரை கட்டையால் தாக்கி, கத்தியால் குத்தி உள்ளனர். இதில் படுகாயமடைந்த 3 பேரும் பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுகுறித்து கனகராஜ் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் சப்-இன்ஸ்பெக்டர் கலைச் செல்வன் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் (20), பாலகிருஷ்ணன் (45), சூர்யா (21) ஆகிய 3 பேரையும் கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

மாஜிஸ்திரேட் ராஜசேகர் 3 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் தலைமறைவாக உள்ள செல்வகுமார், குமரேசன், தினேஷ் ஆகிய 3 பேரையும் தேடிவருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com