பந்தலூர் அருகே ஓட்டலில் பதுக்கி மதுவிற்ற கடை உரிமையாளர் கைது

பந்தலூர் அருகே ஓட்டலில் பதுக்கி மதுவிற்ற கடை உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே, நெலாக்கோட்டை பஜாரில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வந்தது.

தற்போது அந்த கடை மூடப்பட்டதை அடுத்து போலீஸ் நிலையத்தை ஒட்டிய பகுதியில், கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்கப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில் சிறப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது, அந்த பகுதியில் ஒரு ஆட்டோவில் விற்பனைக்காக மதுபாட்டில்களை ஒருவர் இறக்கி கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் விரைந்து சென்று அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சித்திரகனி (வயது52) என்பதும், அந்த பகுதியில் ஒட்டல் வைத்து நடத்தி வருவதும் தெரியவந்தது.

மேலும் இவர் நெலாக்கோட்டையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து ஓட்டலில் மறைத்து வைத்து கூடுதல் விலைக்கு விற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், ஆட்டோ மற்றும் ஓட்டலில் வைத்திருந்த, 170 வோட்டர் பாட்டில்கள், 21 பீர் பாட்டில்கள் என மொத்தம் 191 சரக்கு பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com