

இலங்கை தலைநகர் கொழும்பில் கடந்த வாரம் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இலங்கையில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வெடிகுண்டு தாக்குதல்களால் இலங்கையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால், பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கையில் நடைபெறும் கிரிக்கெட் தொடரை இலங்கை கிரிக்கெட் வாரியம் ரத்து செய்துள்ளது. வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போதைய சூழ்நிலையில், போட்டியை நடத்துவது சரியாக இருக்காது என்பதால், இந்த போட்டித் தொடர்கள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.