காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து அத்துமீறல்

ஜம்மி-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள இரு எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து அத்துமீறலாக துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். #Pakistanitroopsviolates #pakistanborder
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து அத்துமீறல்
Published on

ஸ்ரீநகர்:

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் உரிய பதிலடி தந்து வருகின்றனர்.

மழைக்காலத்தை சாதகமாக்கி பயன்படுத்திகொண்டு பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் தயாராக காத்திருக்கும் பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ வைத்து தாக்குதல்களை நடத்தும் திட்டத்துக்கும் பாகிஸ்தான் ராணுவம் தயாராக உள்ளது. அதற்கான உகந்த நேரத்துக்காக பயங்கரவாதிகள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், பூகுப்வாரா மாவட்டத்தில் உள்ள இரு எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து அத்துமீறலாக துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இன்று காலை தங்டார் எல்லைக்கோட்டுப் பகுதியில் இன்று காலை இந்திய நிலைகளின் மீது பாகிஸ்தான் வீரர்கள் அதிரடியாக துப்பாக்கிகளால் சுட்டனர். 

இந்திய வீரர்களும் எதிர்தாக்குதலில் ஈடுபட்டு தகுந்த பதிலடி கொடுத்தனர். இருதரப்பினருக்கும் இடையில் சுமார் 20 நிமிடங்கள் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இதேபோல், இங்குள்ள கர்னாஹ் எல்லைக்கோட்டுப் பகுதியிலும் பாகிஸ்தான் படைகள் நேற்று மாலை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ராணுவ வட்டாரங்கள் இன்று தெரிவித்துள்ளன. #Pakistanitroopsviolates #pakistanborder

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com