ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி துப்பாக்கிச்சூடு

ஜம்மு காஷ்மீரின் நவ்ஷெரா செக்டாரின் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்தது.
எல்லையில் துப்பாக்கிச்சூடு
எல்லையில் துப்பாக்கிச்சூடு
Published on

ஸ்ரீநகர்:

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷெரா செக்டர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் கா இன்று அதிகாலையில் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

இந்திய ராணுவமும் இதற்கு பதிலடி கொடுத்தது. தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com