

இஸ்லாமாபாத்:
சிம்லா ஒப்பந்தத்தின் பயனாக இந்தியா, பாகிஸ்தான் இடையே 1976-ம் ஆண்டு முதல் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் பாகிஸ்தானின் லாகூர் நகருக்கும், இந்தியாவின் அமிர்தசரஸ் நகருக்கும் இடையே ஆரம்பத்தில் தினந்தோறும் இயக்கப்பட்டு வந்தது. அதன்பின், காலிஸ்தான் அமைப்பினரின் அச்சுறுத்தலால் அது லாகூரில் இருந்து பஞ்சாப்பின் அட்டாரியுடன் நிறுத்தப்பட்டது.
மேலும், 1994-ம் ஆண்டு முதல் வாரம் இருமுறை இயக்கப்பட்டு வருகிறது. தற்போது டெல்லியில் இருந்து அட்டாரி வரை இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இந்த ரெயில் சேவையை பாகிஸ்தான் நிறுத்தி வைத்துள்ளது. வாகா எல்லையில் இந்த ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என இந்தியன் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.