இம்ரான்கான் மீதான ‘செக்ஸ்’ புகாரை விசாரிக்க பாராளுமன்ற குழு: பிரதமர் அப்பாசி நடவடிக்கை

பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் இம்ரான்கான் மீதான ‘செக்ஸ்’ புகார் குறித்து விசாரிக்க பாராளுமன்ற குழு அமைத்து புதிய பிரதமர் அப்பாசி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இம்ரான்கான் மீதான ‘செக்ஸ்’ புகாரை விசாரிக்க பாராளுமன்ற குழு: பிரதமர் அப்பாசி நடவடிக்கை
Published on

கராச்சி:

பாகிஸ்தானில் உள்ள எதிர்க்கட்சிகளில் ஒன்றான பாகிஸ்தான் தெக்ரிக்- இன்சாப் கட்சி தலைவர் இம்ரான்கான் (64).

இவர் மீது அவரது கட்சியை சேர்ந்த பெண் எம்.பி. ஆயிஷா குலாலை ‘செக்ஸ்’ புகார் கூறியிருந்தார். தன்னை திருமணம் செய்யும் எண்ணத்தை ஆபாச வார்த்தைகளுடன் கூடிய செய்திகள் அனுப்பி வெளியிட்டார் என தெரிவித்து இருந்தார்.

இக்குற்றச்சாட்டை இம்ரான் கான் மறுத்தார். நவாஸ் செரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தன்னை பழிவாங்க இத்தகைய கீழ்த்தரமான அரசியல் நடத்துகிறது. அதற்கு ஆயிஷா குலாலையும் துணை போய் இருக்கிறார் என்றார்.

இந்த ‘செக்ஸ்’ புகார் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாகிஸ்தானில் புதிதாக பிரதமர் பதவி ஏற்றிருக்கும் அப்பாசி இப்பிரச்சனை குறித்து விசாரிக்க பாராளுமன்ற குழு அமைக்கப்படும் என்றார்.

அதற்கு இம்ரான்கான் கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இப்பிரச்சனை பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அதில் தீர்மானம் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து தீர்மானம் நிறைவேறியது.

எனவே, இம்ரான்கான் மீது கூறப்பட்டுள்ள ‘செக்ஸ்’ புகார் குறித்து விசாரிக்க பாராளுமன்ற குழு அமைக்கப்பட்டது. இக்குழு விசாரணை நடத்தி பாராளுமன்றத்தில் இன்னும் ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் என அறிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com